தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல்: 5 பேருக்கு வலை

மண் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல்: 5 பேருக்கு வலை

மண் கடத்திய 5 வாகனங்கள் பறிமுதல்: 5 பேருக்கு வலை


ADDED : ஆக 19, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த கப்பல்வாடியில் நேற்று முன்தினம் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கப்பல்வாடி வழியாக சக்கில்நத்ததிற்கு கடத்த முயன்றது தெரிந்தது. அதிகாரிகள் புகார் படி, பர்கூர் போலீசார், லாரியை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர் சுரேஷ், 39, என்பவரை தேடி வருகின்றனர்.

நாகரசம்பட்டி அருகே வருவாய் துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது என்.மோட்டூர் அருகே நங்கலேரி ஏரியில் பொக்லைன் உதவியோடு, டிராக்டர்களில் சிலர் மண் திருடி கொண்டிருந்தது தெரிந்தது. அதிகாரிகள் வருவதை பார்த்தவுடன் அவர்கள் தப்பி ஓடினர். இது குறித்து என்.மோட்டூர் வி.ஏ.ஓ., தினேஷ்குமார் புகார் படி, நாகரசம்பட்டி போலீசார், மண் திருட்டிற்கு பயன்படுத்திய, ஒரு பொக்லைன், மூன்று டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம், அனுமந்தீர்த்தம், சுரேஷ், 27, சூர்யா, 21, போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளி அசோகன், 45, சுண்டக்காப்பட்டி சந்தோஷ்குமார், 31, ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us