/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட விளையாட்டு அரங்கில் 5ம் கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
/
மாவட்ட விளையாட்டு அரங்கில் 5ம் கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
மாவட்ட விளையாட்டு அரங்கில் 5ம் கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
மாவட்ட விளையாட்டு அரங்கில் 5ம் கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
ADDED : மே 29, 2024 07:42 AM
கிருஷ்ணகிரி: மாவட்ட விளையாட்டு அரங்கில், 5ம் கட்ட நீச்சல் பயிற்சியில், 67 பேர் பங்கேற்றுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், நீந்தக்கற்றுக் கொள்வதற்கான முதல்கட்ட பயிற்சியில், 16 பேரும், 2ம் கட்டமாக, 61 பேரும், 3ம் கட்டமாக, 101 பேரும், 4ம் கட்டமாக, 83 பேரும் நீச்சல் பயிற்சி பெற்றனர்.
5ம் கட்ட நீச்சல் பயிற்சி கடந்த, 23 முதல் வரும் ஜூன், 3 வரை நடக்கிறது. இதில், 42 மாணவர்கள், 25 மாணவியர் என மொத்தம், 67 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். அதன்படி, 5 கட்டமாக நடந்த நீச்சல் பயிற்சியில், மொத்தம், 339 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாங்களாகவே குளம், குட்டை, கிணறு மற்றும் ஆற்றில் நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டாம் என்றும், முறையாக பயிற்சியாளர்களால், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் மட்டும் நீச்சல் பயிற்சி கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விபரங்களுக்கு, 74017 03487 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.