தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 70 சதவீத ஆடு விற்பனை குறைவு

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 70 சதவீத ஆடு விற்பனை குறைவு

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 70 சதவீத ஆடு விற்பனை குறைவு


ADDED : மார் 21, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; தேர்தல் நடத்தை விதிமுறைகளால், 70 சதவீத ஆடு விற்பனை குறைந்தது.

கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி வாரச்சந்-தையில், வாரந்தோறும் வெள்ளிக்

கிழமை ஆடு, மாடு, கோழி விற்பனை செய்யவும், வாங்கவும் சந்தை கூடுவது வழக்கம். அதன்படி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் சந்-தைக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்-களில் இருந்தும், வியாபாரிகள் விவசாயிகள் நேரடியாக வந்து ஆடு, மாடு, கோழிகளை வாங்கிச் செல்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு அதிகளவில் ஆடுகள் விற்பனையாகும்.

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேர்தல் பறக்கும் படையி னர் சோதனை நடத்தி, 50,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்கின்-றனர். இதனால் நேற்று நடந்த வாரச்சந்தையில் வெளி மாவட்ட, மாநிலத்தில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் குறைவாகவே வந்திருந்-தனர். இதனால் ஆடு விற்பனை குறைந்ததால், விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இது குறித்து விவசாயிகள், வியாபாரிகள் கூறு-கையில், 'ரம்ஜான் பண்டிகைக்காக சந்தையில் இருமடங்கு விற்பனையாகும். குறைந்தபட்சம், 5 முதல், 8 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கும். ஆனால் இன்று (நேற்று) நடந்த சந்தையில், 3,000 ஆடுகள் மட்டுமே விற்பனையானது. இதன் மூலம், 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஆடுகள் விற்பனையானது. 70 சதவீத ஆடுகள் விற்பனை-யாகவில்லை,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us