/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டி.கொத்தப்பள்ளியில் எருது விடும் விழா சீறிப்பாய்ந்த 700 காளைகள்; 7 பேர் காயம்

ADDED : ஏப் 19, 2025 01:46 AM
உத்தனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் பழமையான திரவுபதி அம்மன் தர்மராஜ சுவாமி கோவிலில், 386 ம் ஆண்டு தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று காலை எருது விடும் விழா நடந்தது. சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம், தேன்
கனிக்கோட்டை சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விழா திடலில்
ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை அடக்கி அதன் கொம்பில் கட்டப்பட்டிருந்த தடுக்குகளை இளைஞர்கள் எடுத்தனர்.
காளைகளை அடக்க முயன்ற இளைஞர்கள், 7 பேர் லேசான காயமடைந்து, முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால், உத்தனப்பள்ளி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.