/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
/
கிருஷ்ணகிரியில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரியில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரியில் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
ADDED : ஜன 27, 2025 02:33 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், நேற்று, 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி., தங்கதுரை முன்னிலையில், கலெக்டர் சரயு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பங்களை கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய போலீஸ், தீயணைப்பு, வருவாய்த்துறை, மருத்துவம் மற்றும் கல்-வித்துறை என மொத்தம், 26 துறைகளை சேர்ந்த, 451 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்-டினார்.மேலும், 45 பயனாளிகளுக்கு, 33.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். அதே போல், 58 பேருக்கு, தமிழக முதல்வரின் போலீஸ் பதக்கம் மற்றும் சான்றி-தழ்களை வழங்கி பாராட்டினார். இதையடுத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்-சிகள் நடந்தன. விழாவில், டி.ஆர்.ஓ., சாதனைகுறள், மற்றும் பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரக்கன்றுகளை நட்டார். இதில், நீதிபதிகள் அமுதா, கோகுல கிருஷ்ணன், மோகன்ராஜ், ஜெயந்தி, ஜெனிபர், அஷ்பக் அகமது, கார்த்திக் ஆசாத், இருதயமேரி, ஸ்ரீவஸ்தவா, மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
*கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி தலைவர் பரிதா நவாப் தேசியக்கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். சிறந்த துாய்மை பணியாளர் விருது பெற்ற சாமிநாதனுக்கு, 4 கிராம் தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
* ஓசூர் சப் கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் பிரியங்கா தேசியக்கொடி ஏற்றினார். ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் சத்யா தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீ-ரப்பா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
* ஊத்தங்கரையிலுள்ள அரசு
அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரி களில், குடியரசு தின விழா
கொண்டாடப்பட்டது.

