தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 9 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

9 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

9 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


ADDED : மார் 18, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

9 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 232 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். தொடர்ந்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்ட கலெக்டர் தினேஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 9 பேருக்கு, 57,672 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமரன், தர்மராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தனஞ்செயன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us