/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரியில் 9 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம்
/
கி.கிரியில் 9 ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் திருமணம்
ADDED : அக் 22, 2024 12:58 AM
கி.கிரியில் 9 ஜோடிகளுக்கு
சீர்வரிசையுடன் திருமணம்
கிருஷ்ணகிரி, அக். 22-
கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 9 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு, பர்கூர், தி.மு.க., -எம்.எல்.ஏ.,
மதியழகன் ஆகியோர், மணமக்களை வாழ்த்தி,
இலவச சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
கலெக்டர் சரயு பேசுகையில், ''பொருளாதாரத்தில் பின்தங்கிய, 9 ஜோடிகளுக்கு, கிருஷ்ணகிரி காட்டி
நாயனப்பள்ளி முருகன் கோவிலில், திருமணம் நடத்தி, 4 கிராம் தாலி உட்பட, 60,000 ரூபாய் மதிப்பிலான கட்டில், பீரோ, மெத்தை மற்றும் சமையல் பாத்திரங்கள் சீர்வரிசை பொருட்களாக வழங்கப்பட்டன,'' என்றார்.
இதில், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம், தாசில்தார்
பொன்னாலா உள்பட பலர் பங்கேற்றனர்.