ADDED : நவ 17, 2024 02:21 AM
4 மாத பெண் குழந்தை பலி
ஓசூர், நவ. 17-
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பிதிரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரத். இவருக்கு சிவகாமி என்ற பெயரில், 4 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், பரத்தின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், குழந்தையை அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வளர்த்து வந்தனர். கடந்த, 7ல் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து கடந்த, 14ல் வீடு திரும்பிய நிலையில், அன்றிரவு, 9:50 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தையின் பாட்டி வள்ளி, 42, புகார் படி, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.