/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில் விழாவில் பேனரை கிழித்த சம்பவத்தில் 34 பேர் மீது வழக்கு
/
கோவில் விழாவில் பேனரை கிழித்த சம்பவத்தில் 34 பேர் மீது வழக்கு
கோவில் விழாவில் பேனரை கிழித்த சம்பவத்தில் 34 பேர் மீது வழக்கு
கோவில் விழாவில் பேனரை கிழித்த சம்பவத்தில் 34 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 20, 2024 06:09 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையில் பனந்தோப்பு கிராமம் உள்ளது.
இங்கு மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக ஊர் இளைஞர்கள் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டன. மாலை 6:30 மணியளவில் கிருஷ்ணகிரி காமராஜ் நகரை சேர்ந்த பசுபதி, 30 மற்றும் சிலர் அங்கு சென்றனர். அவர்கள் பிளக்ஸ் பேனர்கள் வைத்தது தொடர்பாக கிராம மக்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.பசுபதியின் கூட்டாளிகள் சிலர் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து, பேனர்களை கிழித்தனர். மேலும் பொதுமக்களை மிரட்டி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி பனந்தோப்பு பகுதியை சேர்ந்த ராமலிங்கம், 71, என்பவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்படி, 8 பேரை போலீசார் கைது செய்தனர்.பெத்ததாளப்பள்ளி வி.ஏ.ஓ., குப்தா பர்வர்தனன் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், கிராமத்தில் பிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்தி, மிரட்டி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாலை மறியல் நடந்ததாகவும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி போலீசார் ராமலிங்கம் உட்பட மொத்தம், 34 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இது தவிர அனுமதியின்றி பேனர் வைத்த, 4 பேர் மீதும் வழக்குப்பதிந்துள்ளனர்.