/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா
/
மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா
மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா
மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா
ADDED : நவ 15, 2024 02:26 AM
மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு
பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா
கிருஷ்ணகிரி, நவ. 15-
ஓசூர், பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா மற்றும் பள்ளிக்கு, பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பொன் நாகேஷ் தலைமை வகித்தார். சி.இ.ஓ., (பொ) முனிராஜ் மற்றும் மாநகராட்சி, 3வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ரஜினி ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். பெற்றோர், பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், நோட்டு, புத்தகங்கள், துாய்மை பணிக்கு தேவையான பொருட்கள், பழங்கள் போன்ற, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, பேடரப்பள்ளி பகுதியில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று, தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.
தொடர்ந்து, பள்ளியில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வில் முதலிடம் பெற்ற, 42 மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின், மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் சதீஷ்குமார், அன்னையா, ராஜி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமரவேல், ஆசிரியர் பயிற்றுனர் காயத்ரி, பள்ளி மேலாண்மை குழு தலைவி விஜி, பெற்றோர் ஆசிரியர் தலைவர் லக்கப்பா, செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.