/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நெல்லில் இருந்து பதரை பிரிக்கும் இயந்திரம்
/
நெல்லில் இருந்து பதரை பிரிக்கும் இயந்திரம்
ADDED : ஜன 15, 2025 12:42 AM
போச்சம்பள்ளி, :
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில், தமிழர் திருநாளான பொங்கலுக்கு நெல் நடவு செய்து அறுவடை முடிந்த நிலையில், இன்று பெரும்பானை என அழைக்கப்படும், மாட்டு பொங்கலுக்கு புதிய அரிசியை பயன்படுத்துவது விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வழக்கம்.
இந்நிலையில், போச்சம்பள்ளி அடுத்த மூங்கம்பட்டி பகுதியில் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை காய வைத்து, அதிலிருந்து பதரை பிரிக்க இயற்கை காற்று ஒத்துழைக்காமல் ஏமாற்றியது. இதனால் வேறு வழியின்றி விவசாயி மாரியப்பன், 57, என்பவர் நுாதன முறையில் நெல்லை துாற்றும்போது, அதற்கு ஸ்பிரேயர் மூலம் காற்றை வெளிப்படுத்தி, நெல்லில் இருந்து பதரை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.