/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கும்பல் கத்தியால் தாக்கி 8 பவுன் நகை கொள்ளை
/
ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கும்பல் கத்தியால் தாக்கி 8 பவுன் நகை கொள்ளை
ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கும்பல் கத்தியால் தாக்கி 8 பவுன் நகை கொள்ளை
ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கும்பல் கத்தியால் தாக்கி 8 பவுன் நகை கொள்ளை
ADDED : மே 09, 2024 06:11 AM
ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே, அரசு பள்ளி ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், ஆசிரியரின் கையில் கத்தியால் குத்தி விட்டு, 8 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே சாலிவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 48. அப்பகுதியிலுள்ள அரசு பள்ளி ஆசிரியர்; ஊர் ஒதுக்குப்புறத்தில் புதிதாக கட்டிய வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி ஹேமாவதி, 45, தன் இரு மகள்களுடன் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு, 12:30 மணிக்கு, கதவை தட்டும் சத்தம் கேட்டு ஜெய்சங்கர் எழுந்தார். அப்போது, 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த, 4 பேர் கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, ஆசிரியர் ஜெய்சங்கரின் இரு கைகளிலும் கத்தியால் குத்தியது. மேலும், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் மனைவி ஹேமாவதி அணிந்திருந்த, 5 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த, 3 பவுன் என, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து தப்பியது. ஆசிரியர் புகார் படி, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி மற்றும் இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் விசாரணை நடத்தினர். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். பக்கத்து மாவட்டமான, தர்மபுரி அருகே கடந்த, 6ம் தேதி நள்ளிரவில், 4 பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பல் வீடு புகுந்து, வீட்டின் உரிமையாளர்களை தாக்கி கொள்ளை அடித்த சம்பவத்தை தொடர்ந்து, தேன் கனிக்கோட்டையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.