ADDED : அக் 29, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி,கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி அடுத்த, மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் சக்தி, 45. இவர் நேற்று மதியம் மத்துாரிலிருந்து தர்மபுரி செல்லும் சாலையில், சர்ச் எதிரே, தன் ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்திச்சென்றார்.
அப்போது சிகரலப்பள்ளி அடுத்த, ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகரண், 60, என்பவர், பைக்கை திருடிச்சென்றார். இதை பார்த்த சக்தி, கண்ணன்டஹள்ளி பகுதியிலுள்ள தன் உறவினருக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்து விட்டு, வேறு பைக்கில் துரத்திச்சென்றார். கண்ணன்டஹள்ளி கூட்ரோட்டில் ஜெயகரணை பிடித்து, அங்கிருந்தவர்கள் தர்ம அடி கொடுத்தனர். மத்துார் போலீசார் ஜெயகரணை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

