ADDED : மே 01, 2024 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:சூளகிரி
அடுத்த பெத்தசிகரலப்பள்ளி அருகே ஆலுசோனை கிராமத்தை சேர்ந்தவர்
நாராயணப்பா மகன் கோட்டேஸ், 18; டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்தி
விட்டு வீட்டில் இருந்தார்.
ராமன்தொட்டி கிராமத்தில் நேற்று நடந்த
எருது விடும் விழாவை காண சென்ற கோட்டேஸ், அதன் பின், தன் நண்பர்களுடன்
திராடி கிராமத்திலுள்ள விவசாய கிணற்றுக்கு சென்று குளித்தார்.
கிணற்றுக்குள் குதித்த கோட்டேஸ் நீண்ட நேரமாக மேலே வரவில்லை. அவர்
கிணற்றுக்குள் மூழ்கி உயிரிழந்ததை அறிந்த நண்பர்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
ஓசூர் தீயணைப்புத்துறையினர் போராடி கோட்டேஸ் சடலத்தை மீட்டனர். சூளகிரி போலீசார்
விசாரிக்கின்றனர்.