sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

/

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


ADDED : ஜன 11, 2025 03:17 AM

Google News

ADDED : ஜன 11, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்-கோட்டை திருமா நகரை சேர்ந்தவர் சித்தலிங்கம், கூலித்தொழி-லாளி; இவரது மனைவி நாகம்மா, 24. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

மீண்டும் கர்ப்பமடைந்த நாகம்மாவிற்கு நேற்று மதியம், 2:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஓசூர் அப்பாவு நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து, 40 கி.மீ., தொலைவில் உள்ள திருமா நகருக்கு டிரைவர் ராம்குமார் ஆம்புலன்ஸ் வாக-னத்தை வேகமாக ஓட்டி சென்றார்.மதியம், 2:28 மணிக்கு அங்கு சென்று, நாகம்மாவை ஏற்றி கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் போது, வீட்டிலிருந்து புறப்பட்டு, 200 மீட்டர் துாரத்திலேயே மதியம், 2:50 மணிக்கு, நாகம்மாவிற்கு ஓடும் ஆம்புலன்சில், 3 கிலோ எடையில் சுக பிர-சவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர் மதுபாலா பிரசவம் பார்த்தார். தாயும், சேயும் நலமாக இருந்ததால், உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.






      Dinamalar
      Follow us