/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மளிகை கடையில் பெட்ரோல் விற்பனை செய்த பெண் கைது
/
மளிகை கடையில் பெட்ரோல் விற்பனை செய்த பெண் கைது
ADDED : டிச 15, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மளிகை கடையில் பெட்ரோல்
விற்பனை செய்த பெண் கைது
ஓசூர், டிச. 15-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுார் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார், தேவிரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த விஜய் மல்லேஷ் மனைவி விஜயா, 36, என்பவர் தனது மளிகை கடையில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோலை கேன்களில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, விஜயாவை கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவித்தனர்.