ADDED : மே 16, 2026 04:39 AM
போச்சம்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா அலுவலக வளாகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆதார் சேவை மையம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மையத்திற்கு, போச்சம்-பள்ளி தாலுக்காவிற்கு உட்பட்ட, 30க்கும் மேற்-பட்ட வருவாய் கிராமத்திலிருந்து சிறு குழந்-தைகள் முதல், பெரியவர்கள் வரை ஆதார் பெயர் மாற்றம், கருவிழி பதிவு, மொபைல் எண் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக தினமும் 50க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன், ஆதார் சேவை மையத்தில் உள்ள சிஸ்டம் பழு-தானது. இதனால், வெவ்வேறு பகுதியிலிருந்து மக்கள் ஆதார் சேவை மையத்திற்கு வந்து, திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்மந்-தப்பட்ட நிர்வாகம், உடனடியாக ஆதார் சேவை மையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
