/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 12 பவுன் நகை 'அபேஸ்'
/
பஸ்சில் பயணித்த பெண்ணிடம் 12 பவுன் நகை 'அபேஸ்'
ADDED : டிச 07, 2024 07:26 AM
போச்சம்பள்ளி,: கர்நாடக மாநிலம், பெங்களூரு எச்.ஏ.எல், ரெட்டிபாலையா பகு-தியை சேர்ந்தவர் பூங்காவனம், 33. இவர் கடந்த, 4ல் பெங்களூரு மடிவாலா பஸ் ஸ்டாப்பிலிருந்து, திருவண்ணாமலையில் நடக்கும் தனது தம்பி வெங்கடேசன் மனைவியின் தங்கை திரும-ணத்திற்கு செல்வதற்காக, விழுப்புரம் கோட்டம் அரசு பஸ்சில் சென்றார்.
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை பிரிவு சாலையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஏறியதையடுத்து, அவர் அமர்வதற்கு
தான் உட்-கார்ந்து இருந்த இடத்தை விட்டுக் கொடுத்தார். நிறை மாத கர்ப்-பிணி மத்துார் பஸ் ஸ்டாண்டில் இறங்கிய
உடன், பூங்காவனம் சீட்டில் அமர்ந்து தனது ஹேண்ட் பேக்கை பார்த்தபோது அதிலி-ருந்த, 12 பவுன் நகையை
காணவில்லை. இதுகுறித்து, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.