ADDED : பிப் 11, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: திருவண்ணாமலை மாவட்டம், பெரியகாலாபாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி, 49. கூலித்தொழிலாளி; கடந்த, 8 இரவு, 8:45 மணிக்கு, ஓசூர் தின்னுார் ஐ.டி.ஐ., பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார்.
அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, முனுசாமி பாக்கெட்டில் இருந்த, 1,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பினார்.
முனுசாமி புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரித்த போது, ஓசூர் தின்னுார் காயத்திரி கார்டன் பகுதியில்
வசிக்கும், பெங்களூரு யெலவங்கா துவாரகா நகரை சேர்ந்த சீனிவாசன், 22, என்பவர் வழிப்பறியில்
ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

