பாறைக்கு வெடி வைத்த போது விபத்து; தொழிலாளி படுகாயம்
பாறைக்கு வெடி வைத்த போது விபத்து; தொழிலாளி படுகாயம்
ADDED : அக் 04, 2024 01:22 AM
அ நிறம் | அளவு
பாறைக்கு வெடி வைத்த போது
விபத்து; தொழிலாளி படுகாயம்
ஓசூர், அக். 4-
தேன்கனிக்கோட்டை அடுத்த கச்சுவாடியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா, குவாரி உரிமையாளர். இவரது குவாரியில் தர்மபுரி மாவட்டம், ராமர்கூடலை சேர்ந்த மல்லிகன், 55, என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த, 1ல் மல்லிகன் பாறைக்கு வெடி வைக்கும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், மல்லிகனின் இரண்டு கைகள், முகம் உள்ளிட்டவற்றில் காயம் ஏற்பட்டது. புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
