தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நெற்பயிர் காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம்

நெற்பயிர் காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம்

நெற்பயிர் காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம்


ADDED : ஆக 10, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: நெற்பயிரை காப்பீடு செய்ய, கூடுதல் கால அவகாசம் வழங்கப்-பட்டுள்ளது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்-குனர் (பொ) உமா வெளியிட்டுள்ள அறிக்கை:

தற்போது நிலவும் 'எல்நினோ' நிகழ்வின் தாக்கத்தால், தென்-மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும். எனவே, அனைத்து விவசாயிகளும் தங்களது பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், நெற்பயிரை காப்பீடு செய்ய, வரும், 14ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நெற்ப-யிரை சாகுபடி செய்யும் விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்ப-டுத்தி கொள்ளலாம்.

அதேபோல், சோளம், ராகி, மக்காச்சோளம், துவரை மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது பயிர்களை வரும், 17-ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கு செப்., 16ம் தேதி வரையும், பருத்திக்கு செப்., 30ம் தேதி வரையும் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அருகி-லுள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us