தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

ஆதிசங்கரர் ஜெயந்தி விழா


ADDED : ஏப் 22, 2026 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 02:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சங்கரமடத்தில், சங்கர ஜெயந்தி, ராமானுஜ ஜெயந்தி மஹோத்ஸவம் மற்றும் சஷ்டி உபநயன வைபவ விழா கடந்த, 19ல் துவங்கியது. நேற்று முன்தினம், குழந்தைகளுக்கு சமஷ்டி முறையில் உபநயனமும், பிரம்மோப-தேசமும் நடந்தது.

நேற்று காலை, ஆதிசங்கர பகவத் பாதாள் ஜெயந்தி அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், ஆதிசங்கரர் சிலைக்கு பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, மஞ்சள் நீர் போன்றவற்றால் திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து, ஆரா-தனை, அஷ்டோத்திர அர்ச்சனை, ஆதிசங்கரரின், 108 நாமங்-களை சொல்லி பூஜை செய்தனர். பழங்கள், பாயசம், வெண்-பொங்கல் படைத்து, கற்பூர ஆரத்தி, நெய் தீப ஆராதனை ஆகி-யவை நடந்தது. பின்னர் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு படித்து, வேத பாரா-யணம் நடத்தப்பட்டது. ஆதிசங்கரர் அத்வைத தத்துவத்தை நிலைநாட்டியவர் என்பதால், அவரது ஜெயந்தியான நேற்று அவ-ரது உபதேசங்கள், தத்துவங்கள் பற்றிய சொழ்பொழிவும் நடந்-தது. இன்று, (ஏப்.22) ராமானுஜாச்சார்யார் ஜெயந்தி ஆராதனை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us