ADDED : பிப் 03, 2026 07:09 AM

அ நிறம் | அளவு
ஓசூர்; சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மாநில அளவில் நடத்திய தேர்வில், ஓசூர் அதி-யமான் பாலிடெக்னிக் கல்லுாரியை சேர்ந்த, 4 மாணவ, மாணவியர், 'ஓ' தரத்தில் சிறப்பாக தேர்ச்சி பெற்று, கல்லுாரிக்கு பெருமை சேர்த்-துள்ளனர். இ.சி.இ., துறை மூன்றாமாண்டு மாணவன் பூவரசன், கணினி பொறியியல் துறை மூன்றாமாண்டு மாணவியர் வஷ்மிதா, யஷிகா, திரிஷா ஆகியோர், 'ஓ' தரத்தில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்த மாணவ, மாணவியரை, கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் பாராட்டி, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அவர் பேசும் போது, இந்த சாதனை மூலம், அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியின் கல்வித்தரம், மாணவர்களின் திறமை, மாநில அளவில் மேலும் உயர்த்தியுள்-ளதாக தெரிவித்தார். துறைத்தலைவர் புவியரசு, ஆசிரியைகள் விஜயலட்சுமி, இளவரசி உட்பட பலர் பங்கேற்றனர்.
