/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர் அரசு மகளிர் கல்லுாரியில் முதுநிலை மாணவியர் சேர்க்கை
/
பர்கூர் அரசு மகளிர் கல்லுாரியில் முதுநிலை மாணவியர் சேர்க்கை
பர்கூர் அரசு மகளிர் கல்லுாரியில் முதுநிலை மாணவியர் சேர்க்கை
பர்கூர் அரசு மகளிர் கல்லுாரியில் முதுநிலை மாணவியர் சேர்க்கை
ADDED : ஜூலை 02, 2025 01:38 AM
கிருஷ்ணகிரி, பர்கூர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் காயத்திரிதேவி வெளியிட்டுள்ள அறிக்கை:-
பர்கூர், அங்கிநாயனப்பள்ளியில் உள்ள அரசு மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் முதுநிலை மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இக்கல்லுாரியில் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்சி., மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், உணவு மற்றும ஊட்டச்சத்தியல், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.
விருப்பமுள்ள மாணவியர், www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 1032009 என்ற கல்லுாரி குறியீட்டில் வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மாற்று சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், இளநிலை மதிப்பெண் மற்றும் பட்ட சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, மின்னஞ்சல் முகவரி, மொபைல்போன் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தனி நபர் வங்கி கணக்குகள் ஆகியவை வேண்டும்.
கல்லுாரி மாணவியர் சேர்க்கைக்கான உதவி மையம் செயல்படுகிறது. உதவி மையத்தை 04343 - 265594 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.