தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இ.பி.எஸ்., வருகை குறித்து ஆலோசனை

இ.பி.எஸ்., வருகை குறித்து ஆலோசனை

இ.பி.எஸ்., வருகை குறித்து ஆலோசனை


ADDED : ஆக 05, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., வரும், 11 மற்றும், 12ல், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, கிருஷ்ணகிரியில், மாவட்ட மகளிரணி சார்பில், மகளிரணி மாவட்ட செயலாளர் கல்பனா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. 2026ல் சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய, 3 தொகுதிகளில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமையில், அதிக ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெறவும், வரும் தேர்தலில், இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமையவும் அயராது உழைக்க வேண்டும்.

தமிழகத்தில் நடக்கும் கொலை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை தடுக்க தவறிய, தி.மு.க., அரசை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மகளிரணி மாவட்ட தலைவர் சுகந்தி, துணை செயலாளர் சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us