/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போட்டி தேர்வில் வெற்றி பெற நுாலகத்தை பயன்படுத்த அறிவுரை
/
போட்டி தேர்வில் வெற்றி பெற நுாலகத்தை பயன்படுத்த அறிவுரை
போட்டி தேர்வில் வெற்றி பெற நுாலகத்தை பயன்படுத்த அறிவுரை
போட்டி தேர்வில் வெற்றி பெற நுாலகத்தை பயன்படுத்த அறிவுரை
ADDED : ஜூன் 22, 2025 01:01 AM
கிருஷ்ணகிரி, ''நுாலக வசதியை பயன்படுத்தி, போட்டி தேர்வில் வெற்றி பெறுங்கள்,'' என, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு பேசினார்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நுாலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பயனைடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அதன்படி நேற்று, 'தேர்வில் வெல்லுங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் தமிழ்சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில், கலந்து கொண்ட முனைவர் நிமலன் மரகதவேல், தமிழின் தொன்மை, சிறப்பு மற்றும் இலக்கிய நடைகள் குறித்தும் சிறந்த பேச்சாளராக மாற, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு பேசுகையில், ''மாணவர்களுக்கு, கல்வியே எதிர்காலத்தின் வழிகாட்டியாக உள்ளது. நமக்கான வேலை என்பது வாழ்வை வளமாக்குகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சி சுற்றுவட்டார மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், அரசு தேர்வுகளுக்கு தேவையான ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் மற்றும், ஸ்மார்ட் டி.வி., இணையதள வசதியுடன் கணினி வசதிகளும் நுாலகத்தில் உள்ளது. இவற்றை பயன்படுத்தி போட்டி தேர்வில் வெற்றி பெறுங்கள்,'' என்றார்.
நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், மற்றும்
நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கு பெற்றனர்.