ADDED : செப் 25, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை; கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம், மாவட்ட குழு தலைவர் எத்திராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாநில செயலாளர் முத்து, மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட செயலாளர் செல்வ ராசு, வட்ட செய-லாளர் சபாபதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வேலு, உஷா, கல்பனா, கிருஷ்ணன், துரைசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
மழை இல்லாமல் பல்வேறு கிராமங்களில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. அதிகா-ரிகள் தனி கவனம் செலுத்தி, தட்டுப்பாடு இல்-லாமல் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
