/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பசுந்தாள் பயிர் சாகுபடி செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
/
பசுந்தாள் பயிர் சாகுபடி செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
பசுந்தாள் பயிர் சாகுபடி செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
பசுந்தாள் பயிர் சாகுபடி செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்
ADDED : மே 03, 2024 07:31 AM
கிருஷ்ணகிரி : விவசாயிகள், பசுந்தாள் பயிர் சாகுபடி செய்ய வேண்டுமென, சூளகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பசுந்தாள் உரங்கள் பயிரிடுவதால், கார மண்ணை மீட்டெடுப்பதோடு, மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது.
மண்ணில் நுண்ணுயிர்கள் வேகமாக பெருக்கும். எனவே, விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர் விதைகளை, மானியத்தில் பெற்று விதைத்து, மண் வளத்தை பாதுகாத்து, மகசூலை பெருக்கலாம்.அதிக மகசூல் பெற, ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் களைக்கொல்லிகள் போன்றவை பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மண்ணில், நுண்ணுயிரிகளின் அளவு குறைகிறது. எனவே, மண்ணின் வளத்தை பெருக்க பாசன வசதி உள்ள நிலங்களில் தக்கை பூண்டு சாகுபடி செய்யலாம். போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்கும்போது, ஏக்கருக்கு, 20 கிலோ வீதம் விதைத்து, 30 முதல், 45 நாட்களுக்குள் பூக்கும் தருணத்தில் மடக்கி, உழவு செய்ய வேண்டும். கோடை பருவத்தில் விதைக்கப்படும் பசுந்தாள் பயிர் மூலம், நிலத்துக்கு தேவையான, 20 சதவீதம் தழைச்சத்து இயற்கையாகவே அதிகரித்து, அடுத்து வரும் பயிருக்கு எளிதில் கிடைக்கும். பசுந்தாள் உரங்கள் பயிரிடுவதால், மண்ணின் கட்டமைப்பை ஏற்படுத்துகிறது . நீர் தேக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்கிறது. களைகளின் பெருக்கம் மற்றும் களை வளர்ச்சி குறைகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.