ADDED : ஏப் 24, 2026 10:59 PM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் கத்தியால் குத்தப்பட்டார்.
கிருஷ்ணகிரி தொகுதி, 1வது வார்டில் அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவராக, அதே பகுதியை சேர்ந்த இதயாத், 31, நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை, 4:30 மணியளவில், அதே பகுதியை சேர்ந்த தபாரக், ஜபார் மற்றும் சலீம் ஆகியோர் வந்து, 'பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு கேட்க எவ்வளவு தைரியம்' எனக்கூறி, இதயாத்தின் இடது கையில் கத்தியால் குத்தி மிரட்டல் விடுத்தனர்.
அங்கிருந்து தப்பிய இதயாத், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அவர், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார்.
காயமடைந்த இதயாத்தை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ., சந்தித்து ஆறுதல் கூறினார்.
