/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்துாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
/
மத்துாரில் அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
ADDED : ஏப் 20, 2025 01:24 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் பஸ் ஸ்டாண்டில், மத்துார் வடக்கு ஒன்றிய, அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில், நேற்று முன்தினம் மாலை ஒன்பதாவது வார திண்ணை பிரசாரம் நடந்தது. இதில் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு பட்ஜெட் என்ற பெயரில் காகித பூவை கையில் கொடுத்து, ஸ்டாலின் அரசின் வெற்று விளம்பர பட்ஜெட் குறித்தும், கனவுலகில் வாழும் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இனியும் நமக்கு தேவையா என்பது குறித்தும் விளக்கம் கொண்ட துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மத்துார் பஸ் ஸ்டாண்டிலுள்ள வணிக நிறுவனங்கள், பிளாட்பார கடைகள், தள்ளுவண்டி கடைகள், பயணிகள், ஆட்டோ ஸ்டாண்ட் பகுதிகளில் வினியோகிக்கப்பட்டது.
மத்துார் வடக்கு அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, நரேஷ்குமார் மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர், 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

