தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பெரிய மாற்றமின்றி வெளியான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்

பெரிய மாற்றமின்றி வெளியான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்

பெரிய மாற்றமின்றி வெளியான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல்


ADDED : மார் 28, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பா-ளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. இதில், கடந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்-டவர்களுக்கே, அதிகளவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய, 6 சட்டசபை தொகுதி கள் உள்ளன. இதில் தளி தொகுதியை தவிர மற்ற, 5 இடங்களிலும், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. கடந்த, 2021 தேர்த-லிலும் இதே நிலை இருந்த நிலையில், தற்-போதும் அதே நிலையே தொடர்கிறது.

கடந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டி-யிட்ட அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., மற்றும் கிழக்கு மாவட்ட செயலர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் தமிழ்-செல்வம் எம்.எல்.ஏ.,வுக்கு அதே தொகுதிகள் முறையே வேப்பனஹள்ளி, கிருஷ்ணகிரி, ஊத்-தங்கரை (தனி) வழங்கப்பட்டுள்ளது.கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், வழக்கு கார-ணமாக போட்டியிட முடியாத நிலையில், மேற்கு மாவட்ட செயலர் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதிக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தன் மீதான வழக்கில் உச்சநீதிமன்-றத்தால் விடுவிக்கப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி இம்முறை ஓசூரில் போட்டியிடுகிறார். அதன்படி கடந்த முறை போட்டியிட்டவர்களுக்கே இம்-முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பர்கூர் தொகுதியில் கடந்த முறை, அ.தி.மு.க., சார்பில் களமிறங்கிய கிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தி.மு.க.,வில் இருந்து கடந்த, 2024ல், அ.தி.மு.க.,வில் ஐக்கியமான கோவிந்தராசனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றமும் இல்லாத வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. கடந்த முறை, மாவட்டத்தில், 5 இடங்களில் போட்டியிட்ட, அ.தி.மு.க., 3 இடங்களில் வென்றது குறிப்பிடத்-தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us