ADDED : மார் 14, 2026 07:28 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில், அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகர பகுதி செயலாளர் ராஜி தலைமை வகித்தார். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி, 500க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று இ.பி.எஸ்., முதல்வராக வர, அ.தி.மு.க.
,விற்கு இரட்டை இலை சின்னத்தில் ஆட்டோ டிரைவர்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் நாராயணன், பகுதி செயலாளர் வாசுதேவன், ஓசூர் ஒன்றிய செயலாளர் ஹரிஷ்ரெட்டி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
