தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மது குடிப்பதை தட்டிக்கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்

மது குடிப்பதை தட்டிக்கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்

மது குடிப்பதை தட்டிக்கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்


ADDED : செப் 08, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தனப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - ராயக்கோட்டை புதிய தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அலே-சீபம் பகுதியில், எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. அதற்காக, அங்கு குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த, 5ம் தேதி இரவு, 9:45 மணிக்கு, மர்ம நபர்கள் மூன்று பேர், எரிவாயு குழாய் பதிக்கும் பகுதியில், தனியார் நிலத்தின் அருகே அமர்ந்து மது அருந்தி உள்-ளனர்.

இதை பார்த்த, எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளி-யான, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுபாஷ்சிங், 55, என்பவர், அப்பகுதியில் அமர்ந்து மது அருந்த வேண்டாம் என்றும், குழாய்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மூன்று பேரும், சுபாஷ்சிங்கை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம-டைந்த சுபாஷ்சிங், ஓசூர் தனியார் மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார். உத்தனப்பள்ளி போலீசார், மர்ம நபர்களை தேடி

வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us