/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனைத்து குறைதீர் கூட்டங்களும் ரத்து
/
அனைத்து குறைதீர் கூட்டங்களும் ரத்து
ADDED : மார் 18, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து குறைதீர் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என, கலெக்டர் சரயு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா தேர்தல் வரும் ஏப்.,19ல் நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முன்தினம் முதல், அமல்படுத்தப் பட்டுள்ளது. எனவே, வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம், மாதாந்திர மக்கள் தொடர்பு திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளவரை நடைபெறாது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

