/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஒதுக்கீட்டுதாரர்கள் வீடு விற்பனை பத்திரம் பெறலாம்'
/
'ஒதுக்கீட்டுதாரர்கள் வீடு விற்பனை பத்திரம் பெறலாம்'
'ஒதுக்கீட்டுதாரர்கள் வீடு விற்பனை பத்திரம் பெறலாம்'
'ஒதுக்கீட்டுதாரர்கள் வீடு விற்பனை பத்திரம் பெறலாம்'
ADDED : ஆக 23, 2025 01:21 AM
ஓசூர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், ஓசூர் வீட்டுவசதி பிரிவு செயற்பொறியாளரும், நிர்வாக அலுவலருமான பாண்டியராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், ஓசூர் வீட்டு வசதி பிரிவால் செயல்படுத்தப்பட்டுள்ள, ஒசூர் திட்டப்பகுதிகளான, 3, 4 மற்றும் 6 முதல், 16 வரை மற்றும் தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி திட்டப்பகுதிகளான, 1, 2, மற்றும் ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம் ஆகிய திட்ட பகுதிகளில், வீடு அல்லது மனை அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் ஒதுக்கீடு பெற்று, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக செலுத்தி, கிரையபத்திரம் பெற்று கொள்ளாத ஒதுக்கீட்டுதாரர்கள், 2015 மார்ச், 31ம் தேதிக்கு முன்பாக தவணை காலம் முடிந்த இனங்களுக்கு மட்டும், வட்டி தள்ளுபடியில் நிலுவை தொகையினை ஒரே தவணையாக செலுத்தி விற்பனைப்பத்திரம் பெற்று கொள்ள அரசு சலுகை வழங்கியிருக்கிறது.
இச்சலுகை வரும், 2026 மார்ச், 31ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். எனவே,
ஒதுக்கீட்டுதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, விற்பனைப்பத்திரம் பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.