ADDED : மார் 16, 2026 07:59 AM
அ நிறம் | அளவு
பர்கூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் மாற்று கட்சியினர், தி.மு.க.,வில் இணையும் விழா நேற்று நடந்தது.
தமிழக வெற்றிக்கழக, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிரணி நிர்வாகி மீனு ஹரீஷ் மற்றும் பர்கூர் பேரூர் இளைஞரணி நிர்வாகி ஹரிரீகுமார் ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்டோர், தமிழக வெற்றிக்கழகம் மற்றும் மாற்று கட்சிகளிலிருந்து விலகி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில், தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சி சால்வை அணிவித்து, மதியழகன் எம்.எல்.ஏ., வரவேற்றார்.
