ADDED : மார் 03, 2026 07:16 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில், த.வெ.க., செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், வடிவேல் முன்னிலை வகித்தனர்.
த.வெ.க., பிரமுகர் சம்பங்கி மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய, 300க்கும் மேற்பட்டோர் தங்களை, த.வெ.க.,வில் இணைத்து கொண்டனர்.
