/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அங்கன்வாடி ஊழியர் 12வது நாளாக போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர் 12வது நாளாக போராட்டம்
ADDED : பிப் 15, 2026 04:55 AM
கிருஷ்ணகிரி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
12வது நாளாக நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலையிலிருந்து பேரணியாக, புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை வரை சென்றனர். அங்கு ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்ற வலியுறுத்தி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். மாநில துணைத்தலைவர் நோஹிரா, செயற்குழு உறுப்பினர் கஸ்துாரி, மாவட்ட தலைவர் முனியம்மா, செயலாளர் பார்வதி, பொருளாளர் அனிதா உட்பட, 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

