/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அங்கன்வாடி ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் 14வது நாளாக போராட்டம்
ADDED : பிப் 17, 2026 07:05 AM

கிருஷ்ணகிரி; தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்-நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கடந்த, 13 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். நேற்று, 14வது நாளாக, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி எண், 313 என்ற எண் வடிவில் அமர்ந்து, போராட்-டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் நோஹிரா தலைமை வகித்தார்.
போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்-களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூ-தியம், 9,000 ரூபாய், அங்கன்வாடி ஊழியர்க-ளுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறை-வேற்றாத, தி.மு.க., அரசை கண்டித்தும், கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்துாரி, மாவட்ட தலைவர் முனியம்மா, செயலாளர் பார்-வதி, பொருளாளர் அனிதா உள்பட பலர் பங்கேற்-றனர்.

