/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ADDED : செப் 23, 2025 01:27 AM
கிருஷ்ணகிரி, :அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தேவி, செயலாளர் சுஜாதா, பொருளாளர் மஞ்சு, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர்.
போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி, 26,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம், 9,000 ரூபாயை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக, 10 லட்சம் ரூபாயும், உதவியாளருக்கு, 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். 5ஜி சிம்கார்டுடன் புதிய மொபைல்போன் வழங்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
உள்ளூர் பணி மாறுதல் வழங்க வேண்டும். கடந்த, 1993ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர்.