/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அண்ணா பல்கலை மாணவ, மாணவியர் கிருஷ்ணகிரி நகராட்சியில் கள ஆய்வு
/
அண்ணா பல்கலை மாணவ, மாணவியர் கிருஷ்ணகிரி நகராட்சியில் கள ஆய்வு
அண்ணா பல்கலை மாணவ, மாணவியர் கிருஷ்ணகிரி நகராட்சியில் கள ஆய்வு
அண்ணா பல்கலை மாணவ, மாணவியர் கிருஷ்ணகிரி நகராட்சியில் கள ஆய்வு
ADDED : மார் 01, 2024 02:12 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
நகராட்சியை மேம்படுத்தும் நோக்கில், 14 கிராம பஞ்.,களை இணைப்பது,
அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து, சென்னை அண்ணா
பல்கலை கழக உதவி பேராசிரியை மதிவதினி தலைமையில், திட்டமிடல் துறை
சார்பில், முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும், 20 மாணவர்கள் கடந்த, 4
நாட்களாக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வரும் மார்ச், 3 வரை
நகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்கள், நேற்று
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட குப்பைக் கிடங்கு மற்றும்
நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையங்கள் மற்றும் கழிவுநீர்
சுத்திகரிப்பு மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமையில், நகராட்சி
துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் நகராட்சி ஊழியர்கள் மக்கும்,
மக்கா குப்பைகளை பிரிப்பது, மக்கும் குப்பைகளிலிருந்து உரம்
தயாரிப்பது, கழிவுநீரை சுத்திகரிக்கும் முறை குறித்து விளக்கினர்.
அண்ணா
பல்கலை கழக உதவி பேராசிரியர் மதிவதினி, சென்னை மாநகர வளர்ச்சி
குழும ஆய்வு மாணவர்கள் பாபு, ரவிச்சந்திரன் மற்றும் நகர், ஊரமைப்பு
இயக்க மாணவர்கள் கண்ணன், ராஜா, கர்நாடக மாநில நகராட்சி ஊரமைப்பு இயக்க
மாணவர்கள் மாணவர்கள் சஜ்தத், அவினாஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

