/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிப்பு
/
முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அறிவிப்பு
ADDED : செப் 11, 2025 01:17 AM
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, இன்றும்,நாளையும், தமிழக முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்காக இன்று காலை, 11:00 மணிக்கு, பேலகொண்டப்பள்ளியில் உள்ள 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' (தால்) நிறுவனத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் விமானம் மூலம் வருகிறார். அங்கிருந்து, ஓசூர் - தளி சாலையிலுள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்திற்கு சென்று, தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
அதன் பின், பாகலுார் சாலையில் விஸ்வநாதபுரம் பகுதியிலுள்ள எல் காட் தொழில்நுட்ப பூங்கா வில் அமைய உள்ள, 'அசென்ட் சர்க்யூட்ஸ்' நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், குருபரப்பள்ளி டெல்டா நிறுவன அமைவிடத்தில், புதிய தொழிற்சாலையை துவக்கி வைக் கிறார். சூளகிரி, கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் 'ரோட்ஷோ' மேற்கொள்கிறார். தொடர்ந்து நாளை (செப்.12), கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லுாரி வளாகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவி கள் மற்றும் ஏழை, எளிய மக்கள், 85,000 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
இதில், அமைச்சர் சக்கரபாணி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் மற்றும் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் சென்னீரன், சீனிவாசலு, மஞ்சுளா முனிராஜ், தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட அமைப்பாளர் சுமன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.