/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது
/
வாலிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது
ADDED : செப் 23, 2024 03:39 AM
ஓசூர்: கர்நாடகா மாநிலம், சர்ஜாபுரம் அருகே சூலிகுண்டோ பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் ரேவந்த்குமார், 30. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்; கடந்த, 18ல் அவரை கடத்திய கும்பல் வெட்டிக்கொன்று, தமிழக எல்லையான ஓசூர் அருகே கொலதாச-புரம் பகுதியில், முகத்தை சிதைத்து வீசி சென்றது. பாகலுார் போலீசார் விசாரித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, ஓசூர் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில், ரேவந்த்குமாரின் உறவினர்களான கர்-நாடகா மாநிலத்தை சேர்ந்த சிவக்குமார், நவீன்குமார், புனித், பிர-வீன்குமார் ஆகிய, 4 பேர் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.
இந்த வழக்கில், சூலிகுண்டே பகுதியை சேர்ந்த, கொலையான ரேவந்த்குமாரின் மாமாவான சீனிவாசன், 50, என்பவரை நேற்று பாகலுார் போலீசார் கைது செய்தனர். ரேவண்ணா உட்பட மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ரேவண்ணா-விற்கும், ரேவந்த்குமாருக்கும் விநாயகர் சிலை வைத்து வழிபடு-வதில், முன்விரோதம் உருவானது. இந்நிலையில், ரவுடி ஒருவ-ருடன் சேர்ந்த ரேவந்த்குமார், அப்பகுதியில் ரவுடியாக வலம் வர துவங்கி உள்ளார். தன்னை தீர்த்து கட்டி விடுவான் என நினைத்த ரேவண்ணா மற்றும் அவரது தரப்பினர், ரேவந்த்குமாரை கடத்தி வெட்டிக்கொலை செய்ததாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்-டது.