ADDED : ஏப் 27, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், தலைமையாசிரியராக பொன்நாகேஷ் உள்ளார்.
மேலும், 7 பட்டதாரி ஆசிரியர்கள், 12 உதவி ஆசிரியர்கள் என மொத்தம், 20 பேர் பணியாற்றுகின்றனர். நடப்பு கல்வியாண்டில், நேற்று ஆசிரியர்களுக்கு கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கு அதிக நாட்கள் வருகை தந்த ஆசிரியர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. அதன்படி, அறிவியல் பட்டதாரி ஆசிரியை பானு, அதிக நாட்கள் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களில் முதலிடம் பிடித்தார். அதேபோல் இரண்டாமிடம் பிடித்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பரந்தாமன், மூன்றாமிடம் பெற்ற உதவி ஆசிரியை ஜெயந்தி ஆகியோருக்கு, பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ், பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

