/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு
/
விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 21, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்கள் மூலம் பயிற்சி பெற்று, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று, கலெக்டர் தினேஷ்குமாரிடம் தங்கள் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நடராஜ முருகன், பயிற்றுனர்கள் குடிலரசன், செங்குட்டுவன், சங்கர், வினோத் குமார், முனிராசு மற்றும் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

