/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அறம் கிருஷ்ணன் நுால்கள் வெளியீட்டு விழா
/
அறம் கிருஷ்ணன் நுால்கள் வெளியீட்டு விழா
ADDED : அக் 08, 2025 01:29 AM
ஓசூர், ஓசூரில், அறம் இலக்கிய அமைப்பு, எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், அறம் கிருஷ்ணன் எழுதிய நான்கு நுால்கள் வெளியீட்டு விழா, ராஜேந்திர சோழன் கடாரம் வென்றான், 1,000வது ஆண்டு விழா, கடாரம் கொண்டான் விருது வழங்கும் விழா நடந்தது. ஓசூர், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் தலைமை வகித்தார். ராசு வரவேற்றார். எலைட் ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார், காளிமுத்து முன்னிலை வகித்தனர்.
'நிழல் தேடும் நிழல்கள்' என்ற நுாலை முருகேஷ் வெளியிட, டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்புசாமியும், 'பேசாத வார்த்தைகள்' கவிதை நுாலை கவிஞர் அறிவுமதி வெளியிட, ஜீவானந்தமும், 'அறமாகிய நான்' வரலாறு நுாலை, பேராசிரியர் அப்துல்காதர் வெளியிட, சிவஞானமும், 'ராஜேந்திர சோழனின் கங்கையும்- கடாரமும்' நுாலை, கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழு தலைவர் கோமகன் வெளியிட, கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனும் பெற்றுக்கொண்டனர்.
ராஜேந்திர சோழன் உருவப்படத்தை, கோமகன் திறந்து வைத்தார். ராஜேந்திர சோழன் உருவப்படத்தை ஓவியமாக வரைந்த ஓவியர் ராஜராஜனுக்கு, 'கடாரம் கொண்டான்' விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் கமலாலயன், கவிஞர்கள் பூபாலன், சம்பத், சிவசுந்தரம், சரவணகுமார், சங்கர், சாய்ராம், ரவி, கருமலை தமிழாழன் உட்பட பலர் பங்கேற்றனர்.