sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரூர் பைபாஸ் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

/

அரூர் பைபாஸ் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

அரூர் பைபாஸ் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

அரூர் பைபாஸ் சாலை சீரமைப்பு பணி துவக்கம்


ADDED : டிச 08, 2025 07:46 AM

Google News

ADDED : டிச 08, 2025 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, நடேசா பெட்ரோல் பங்க் வரையுள்ள சேலம் செல்லும், 2 கி.மீ., துார பைபாஸ் சாலை, கடந்த, 2019ல் இருவழிச்சாலையாக இருந்து, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்-பட்டது.

இச்சாலை வழியாக, சென்னை, திருவண்ணா-மலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும், ஆயிரக்கணக்கான வாக-னங்கள் சென்று வருகின்றன. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, இச்சாலையில் ஜல்-லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்-ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருவதுடன், விபத்தில் சிக்கி

காயம-டைகின்றனர்.

அவ்வப்போது, நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த குழிகளில் மட்டும் பெயரளவிற்கு பேட்ச் ஒர்க் மேற்கொண்டு வந்தனர். அவை ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஜல்லி பெயர்ந்து குழிகளாகி விடுகிறது. தற்போது, பெய்த தொடர்மழையால், சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்-கற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, 2 நாட்களாக சாலை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.

முதற்கட்டமாக, பொக்லைன் வாகனம் மூலம், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சமப்படுத்தும் பணி நடக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சாலை சீரமைக்கும் பணி முழுவதும் நிறைவடைந்து விடும் என, சீர-மைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரி-வித்தனர்.

முதல்வர் வருகையால்...

தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் இல்ல திருமண விழா, வரும், 14ல் மோளையானுாரில்

நடக்கவுள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று விட்டு, அரூர் வழியாக, திருவண்ணாமலையில் நடக்கவுள்ள, தி.மு.க., வடக்கு மண்டல இளைஞரணி நிர்வா-கிகள் மாநாட்டில் கலந்து கொள்வார் என, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனிடையே, அரூரில் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்-பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us