/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா
/
அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா
ADDED : அக் 07, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி கலைத்திருவிழா கடந்த மாதம், 18ம் தேதி துவங்கி இன்று வரை தொடர்ந்து, 20 நாட்கள் நடக்கிறது. கல்லுாரி முதல்வர் பாக்கியமணி தலைமை வகித்தார். நேற்று வரை அனைத்து துறைகள் பங்களிப்புடன் மொத்தம், 31 போட்டிகள் நடந்தன.
1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிறைவு நாளான இன்று, நுண்கலை மன்றம் சார்பில், புதையல் வேட்டை போட்டி நடக்கிறது. கல்லுாரி கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் மீனா பிரியா, உஷாராணி, பழனிசாமி, கவிதா உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.