ADDED : ஜூன் 16, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.
கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகளுடன் பொது-மக்கள் வழங்கிய, 556 மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதல்வர் மருத்துவக்காப்-பீட்டு திட்டத்தில், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு, 5.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்-களை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மற்றும் அனைத்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
