/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
/
சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
ADDED : பிப் 19, 2026 05:35 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், சாம்பல் புதன் திருநாளையொட்டி நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலத்தின் துவக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படும் சிறப்பு திருபலி பூஜையில், கிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்து, தவ நாட்களை கடைபிடிக்க துவங்குகின்றனர். அதன்படி, நேற்று காலை, 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடந்தது. திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை அருள்ராஜ் முன்னின்று நடத்தினார்.
இதில், கிறிஸ்தவர்கள் தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டு, தங்கள் தவமுயற்சிகளை துவங்கினர். தவக்காலத்தை கடைபிடிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருட்களை தவிர்த்து, சுத்த போஜனம் கடைபிடிக்க வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைய, இந்த தவநாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ளுமாறும் திருப்பலியில் அறிவுறுத்தப்பட்டது.
இதே போல், சுண்டம்பட்டி, எலத்தகிரி, புஷ்பகிரி, கந்திகுப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள, கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று தவக்கால சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது.

